தனியார் நிறுவனத்தை கண்டித்து கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளைஞர்!

By இல.ராஜகோபால்

கோவை: இழப்பீடு வழங்காத தனியார் நிறுவனத்தை கண்டித்து கோவை ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காலை நாகராஜ் என்ற வாலிபர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு இருந்த போலீஸார் இளைஞரை தடுத்து காப்பாற்றினர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர், கோவையில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும், பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு காலை இழந்ததாகவும், பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை தனியார் நிறுவனம் தனக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றதாக, இளைஞர் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

அவருக்கு அறிவுரை சொன்ன போலீஸார், "குறை ஏதும் இருந்தால் முறைப்படி ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அதை விடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது” என இளைஞருக்கு போலீஸார் அறிவுரை கூறினர். ஆட்சியர் அலுவலக வாசலில் இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE