உத்தரப்பிரதேசம்: சூதாட்டத்துக்கு அடிமையான நபர் ஒருவர் தனது மனைவியை நண்பர்களிடம் பணயம் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மேலும், தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்யவும் அவர் தனது நண்பர்களுக்கு அனுமதியளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள ஷஹபாத் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், ‘எனக்கு 2013ல் திருமணம் நடந்தது. வரதட்சணைக்காக என் மாமனாரும் என் கணவரும் என்னை சித்திரவதை செய்து தாக்கினர். என் கணவர் மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர், அவர் சூதாட்டத்தின் போது சுமார் ஏழு ஏக்கர் நிலம் மற்றும் எனது நகைகள் அனைத்தையும் இழந்துவிட்டார். மேலும் அவரது நண்பர்களுடன் சூதாட்டத்தின்போது என்னை பணயம் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யவும் அனுமதியளித்துள்ளார்.
அவர் எனக்கு தண்ணீர் கூட கொடுக்காமல், அவரது நண்பர்கள் இருக்கும் போது தாக்கினார். இதனால் நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். ஆனால் செப்டம்பர் 4ம் தேதி, அவர் தனது நண்பர்களுடன் அங்கு வந்து என் விரலை உடைத்து என்னை வீட்டிற்கு இழுத்துசெல்ல முயன்றனர்.
அவர் என் ஆடைகளைக் கிழித்து, என்னைத் தாக்கினார், அவருடைய நண்பர்களும் என்னை தாக்கினர். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் திரண்டு வந்ததும் அவர்கள் ஓடிவிட்டனர். எனக்கு மூன்று சிறிய குழந்தைகள் உள்ளனர். என் கணவர் அவர்களுக்காக வைத்திருப்பதை சேமிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே என் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எனக்கு செய்த கொடுமைகளை என்னால் இப்போது வெளியில் சொல்ல முடியாது. அதை நான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவேன்’ என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
» இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி: மாவட்ட எல்லையில் போலீஸார் தீவிர வாகன சோதனை
» பொத்தேரியில் 1 டன் அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ராம்பூர் காவல் கண்காணிப்பாளர் வித்யாசாகர் மிஸ்ரா தெரிவித்தார்.