அதிர்ச்சி... இளைஞர் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய தம்பதி!

By காமதேனு

சென்னை குரோம்பேட்டையில் இளைஞர் ஒருவரை கணவன், மனைவி இருவர் சேர்ந்து சராமாரியாக தாக்கியதோடு, அவர் மீது கொதிக்கும் சுடு தண்ணீரை ஊற்றினர். இதில் படுகாயமடைந்த இளைஞர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பதியரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (24). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். கடந்த 6ம் தேதி தனது வீட்டிற்கு மது அருந்திவிட்டு இரவு 11 மணிக்கு உணவுப் பொட்டலங்களை வாங்கி சென்றுள்ளார். அப்போது அர்ஜுனின் பக்கத்து வீட்டு வாசலில் மது பாட்டில்கள் கிடந்துள்ளது,

இதை அர்ஜுன் தான் இங்கு போட்டார் என்று எண்ணிய பக்கத்து வீட்டுக்காரர் மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் அர்ஜுனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் அர்ஜுனை ஆபாசமாக திட்டி அங்கிருந்து மரக்கட்டைகளால் அர்ஜுனனை தாக்கியுள்ளார். மேலும் மது பாட்டிலை கொண்டு அர்ஜுன் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த நிலையில், மயங்கி விழுந்த அர்ஜுன் மீது ஆசிரியை ராஜி கொதிக்க கொதிக்க சுடு தண்ணீரை கொண்டு சென்று ஊற்றியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது எழுந்த அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அர்ஜுனின் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அர்ஜுனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.

அர்ஜுன்

60 சதவிகிதம் தீக்காயம் என்பதால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார் அர்ஜுன். இந்நிலையில் அர்ஜுனை தாக்கிய மணிகண்டன் மற்றும் அவர் மனைவி மீது சாதாரண பிரிவுகளின் கீழ் சிட்லபாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், கணவன் மனைவி மீது எந்த கைது நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனையடுத்து, மணிகண்டன் மற்றும் அவரது மனைவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜுனின் தாயார் அளித்த புகாரை அடுத்து, நேற்று இரவு மணிகண்டன், அவரது மனைவி ராஜி ஆகியோரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE