எனது இறுதிச்சடங்கிற்கு வந்துவிடு! மரணத்துக்கு முன் காதலிக்கு அழைப்பு விடுத்த காதலன்!

By காமதேனு

தனது இறுதிச் சடங்கிற்கு வந்து விடுமாறு காதலிக்கு அழைப்பு விடுத்த காதலன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள தபஸ்பேட் பகுதியைச் சேர்ந்தவர் கிரண். கடந்த சில நாட்களுக்கு முன் கிரணை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

முன்னதாக காதலன் கிரண் வீடியோ ஒன்றை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது வெளியிட்டு இருக்கிறார். அதில் பேசிய கிரண், தனது இறுதிச்சடங்குக்கு வரும் காதலிக்கு உருக்கமாக வேண்டுகோளை விடுத்து இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE