விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை: விங் கமாண்டர் மீது வழக்குப்பதிவு

By KU BUREAU

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை நிலையத்தில் ஒரு பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை, மனரீதியான துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் விங் கமாண்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய விமானப்படை உள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பெண் அதிகாரி அளித்த புகாரின்படி, கடந்த டிசம்பர் 31, 2023 அன்று இரவு அதிகாரிகளின் மெஸ்ஸில் நடைபெற்ற புத்தாண்டு விருந்தின் போது, ​​விங் கமாண்டர் பிகே செஹ்ராவத் அவரது அறையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

விங் கமாண்டர் மீது பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் ஜம்மு காஷ்மீர் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2) இன் கீழ், புட்காம் காவல் நிலையத்தில் விங் கமாண்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அதிகாரப் பதவியில் உள்ளவர்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை தொடர்பானது.

2021ம் ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவத்தில், இந்திய விமானப்படை பெண் விமானி ஒருவர் தனது விமான தளபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE