சென்னையில் அதிர்ச்சி... தாய் மாமனை வெட்டிக் கொன்ற இளைஞர்!

By காமதேனு

மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம், பெரியார் தெருவில் வசித்து வந்தவர் கந்தப்பெருமாள். இவரது தங்கையின் மகன் அர்ஜூன், கடலூர் அருகே கூலித்தொழில் செய்து வந்த அவரது தாயும், தந்தையும் சில காலம் முன்பு இறந்து விட்டனர். இதன் காரணமாக அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அர்ஜூன் அவ்வபோது கடலூரில் இருந்து சென்னை வந்து தாய்மாமா கந்தப்பெருமாளுடன் தங்கி செல்வது வாடிக்கை. இந்நிலையில் அர்ஜுன் ஆதம்பாக்கத்தில் உள்ள உறவினர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் கந்தப்பெருமாள் திடீரென இறந்து விட்டதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து உறவினர், அர்ஜுன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் கந்தபெருமாள் பலத்த வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் தகவல் தெரிவித்த உறவினர் அர்ஜூன் மாயமாகி இருந்தார்.

மேலும், கந்தப்பெருமாள் உடலுக்கு அருகே பூ, பழம் வைக்கப்பட்டிருந்ததோடு, பாயும் விரிக்கப்பட்டிருந்தது. இதை எல்லாம் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட அர்ஜூன் இந்த கொலையை அரங்கேற்றி விட்டு, தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மடிப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி, அர்ஜுனை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால் தான் கந்தப்பெருமாள் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE