போலிக் கல்விச்சான்றிதழ் கொடுத்து அமெரிக்கா செல்ல முயற்சி: பொறியாளர் உள்பட 2 பேர் கைது!

By காமதேனு

போலிக் கல்விச்சான்றிதழ் கொடுத்து மேல்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல முயன்ற வாலிபர் மற்றும் போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மாநிலம், பாலநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேம்நாத் (24). இவர் மேல்படிப்பு படிப்பதற்க்காக அமெரிக்கா செல்ல வேண்டி அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்காக விண்ணப்பித்திருந்தார். அதன் பேரில் தூதரக அதிகாரிகள் கடந்த 14-ம் தேதி ஹேம்நாத்தை நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளனர். பின்னர் ஹேம்நாத் தனது கல்லூரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வுக்கு சென்றுள்ளார்.

அப்போது தூதரக அதிகாரி மெல்வின் என்பவர் ஹேம்நாத் சான்றிதழை வாங்கி சரிபார்த்தார். அப்போது அந்த கல்லூரி சான்றிதழ் (பி.டெக்) போலி எனத் தெரியவந்தது. உடனடியாக தூதரக அதிகாரி போலிச் சான்றிதழ் சமர்ப்பித்து அமெரிக்கா செல்ல முயன்ற ஹேம்நாத்தை பிடித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒப்படைத்தார்.

அத்துடன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இதன் பேரில், அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஹேம்நாத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஆந்திரா மாநிலம் நரசராவ்ப்பேட்டையைச் சேர்ந்த ஹரிபாபு என்பவரிடம் இருந்து போலிக் கல்லூரிச் சான்றிதழ் வாங்கியது தெரியவந்தது.

ஹரிபாபுவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஆந்திரா விரைந்து சென்று ஹரிபாபு(35) என்பவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், ஹரிபாபு பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

மேலும் தனியார் நிறுவனத்தில் போதிய வருமானம் இல்லாததால் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பள்ளி, கல்லூரி சான்றிதழ்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த இரண்டு வருடமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வெளிநாட்டில் படிக்கத் தேவையான ஆவணங்களைப் போலியாக தயாரித்துக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

போலீஸார் அவரிடமிருந்து லேப்டாப், ஹார்ட் டிஸ்க், போலி ஆவணங்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அத்துடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா

நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!

அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!

அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE