சாக்குமூட்டைக்குள் நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் சடலம்... கிணற்றில் வீசி சென்ற கொலையாளிகள்!

By காமதேனு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமம் உள்ளது. அதன் அருகில் சேர்ந்தமரம் சாலையில் கண்டமான் குளம் என்னும் குளத்துகரை அருகில் பயன்பாடு இல்லாத கிணறு ஒன்று உள்ளது.

விவசாய வேலைக்காக அந்தப்பக்கம் சென்ற பெண்கள் சிலர் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டு, கிணற்றினுள் எட்டிப்பார்த்துள்ளனர். அங்கு சாக்கு மூட்டை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலம் மிதந்துள்ளது.

சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட பிணம்

இதனையடுத்து, அந்த கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் மிதப்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு படை வீரர்களின் உதவியுடன், கிணற்றுக்குள் வீசப்பட்ட மூட்டையை வெளியில் எடுத்து கொண்டு வந்தனர். அதனை பிரித்து பார்த்த போது அதில் இளம் பெண்ணின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.

இளம்பெண் சாக்குமூட்டைக்குள் கட்டப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டு 4 நாட்களாகி அழுகிய நிலையில் இருந்தது. இதனையடுத்து உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, சம்பவ இடத்தில் புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் தலைமையிலான காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டு பகுதியில் பெண் நிர்வாணமாக சாக்கு முட்டையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE