நடுரோட்டில் பெண்கள் மீது சரமாரியாக தாக்குதல்... கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்த மக்கள்

By காமதேனு

உத்தரபிரதேசத்தில் சில ஆண்களால் இரண்டு பெண்கள் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மஹ்லோலி கிராமத்தில் சொத்து தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆண்கள் சிலர் இரண்டு பெண்களை சாலையில் இழுத்து சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர். அதனை அப்பகுதி பொதுமக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மை காலமாகவே உத்தரபிரதேசத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுவதும், கொடூரமாக தாக்குவதும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE