அடிக்கடி இரவுகளில் வெளியே சென்று திரும்பிய மனைவி... சந்தேகத்தால் தீர்த்துக்கட்டிய கணவன்!

By காமதேனு

70,000 ரூபாய் கொடுத்து பெண்ணை மனைவியாக்கியவர், அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கொலைச் செய்த கணவர் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியின் ஃபதேபூர்பெரி பகுதியில் அடையாளம் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது, அதிகாலையில் ஆட்டோ ஒன்று சென்று திரும்பியது தெரிய வந்தது. இதையடுத்து, ஆட்டோ நம்பரை வைத்து ஓட்டுநர் அருணை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

அவர் கொடுத்த வாக்குமூலத்தில், கொலை செய்யப்பட்ட பெண் தரம்வீரின் மனைவி ஸ்வீட்டி என்று கூறியுள்ளார். ஆதரவற்ற பெண்ணான ஸ்வீட்டியை 70,000 ரூபாய் கொடுத்து தரம்வீர் திருமணம் செய்து மனைவியாக்கியுள்ளார். ஆனால், அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி ஸ்வீட்டி வெளியில் தங்கியுள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட தரம்வீர் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அரியானா எல்லையில் கழுத்தை நெரித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார். இந்த கொலை தொடர்பாக தரம்வீர், சத்யவான், அருண் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE