ஆளுயரத்திற்கு எழும்பிய ரசாயன நுரை; யமுனையில் பக்தியுடன் சாத் பூஜை செய்த பெண்கள்

By காமதேனு

டெல்லி யமுனை நதியில் ஆளுயரத்திற்கு ரசாயன நுரை எழும்பிய போதும், பெண்கள் பக்தி சிரத்தையுடன் சாத் பூஜைகளை செய்து வழிபாடுகள் நடத்தினர்.

வட மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சாத் பூஜை என்ற பண்டிகை நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். 4 நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையின் போது வெள்ளிக்கிழமையிலிருந்து விரதம் இருக்கும் பெண்கள் விரதம் முடிவதை ஒட்டி நீர்நிலைகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்துகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மேற்கண்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதால் இங்கும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரசாயன நுரை பொங்கிய யமுனை - பக்தியுடன் சாத் பூஜை நடத்திய பெண் பக்தர்கள்

இதையொட்டி நேற்று, யமுனை நதியில் ஏராளமான பெண்கள் குவிந்து சூரிய பகவானுக்கு முட்டி அளவு நீரில் நின்று வழிபாடுகள் நடத்தி பூஜைகள் செய்தனர். நேபாள் நாட்டில் துவங்கியதாக கருதப்படும் இந்த பூஜையின் போது, சூரிய பகவானை வழிபட்டால் குடும்ப உறுப்பினர்களின் ஆயுட்காலம் நீடிக்கும் என்பது பொதுமக்களிடையே நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ரசாயன நுரை பொங்கிய யமுனை - பக்தியுடன் சாத் பூஜை நடத்திய பெண் பக்தர்கள்

இதனிடையே கடந்த சில மாதங்களாக யமுனை நதியில் கழிவு நீர் கலப்பது அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் ரசாயன நுரைகள் ஆளுயரத்திற்கு உருவாகியுள்ளன.

இந்த நுரைகள் உடலில் பட்டால் எரிச்சல், சொறி ஆகியவை ஏற்படுவதோடு, அருகில் நிற்பவர்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சாத் பூஜைக்காக வந்த பெண்கள் பலரும், ரசாயன நுரையை பொருட்படுத்தாமல் யமுனை நதியில் இறங்கி இந்த பூஜைகளை மேற்கொண்டிருந்த காட்சிகள் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

யமுனை நதியில் கழிவு மற்றும் ரசாயன நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE