பீர் பாட்டிலால் தாக்குதல்... தலையில் இருந்து கொட்டிய ரத்தம்! பாஜக பிரமுகரை கொல்ல முயற்சி!

By காமதேனு

கர்நாடகாவில் பாஜக பிரமுகரை மர்ம கும்பல் ஒன்று பீர் பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுரகியின் சித்தாபூரைச் சேர்ந்தவர் மணிகாந்தா ரத்தோட் (43). பாஜக பிரமுகரான இவர் சட்டசபை தேர்தலில், அமைச்சர் பிரியங்க் கார்கேயை எதிர்த்து, போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை கொலை செய்ய வேண்டும் என்று, மணிகாந்தா ரத்தோட் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுமட்டுமின்றி கார்கே குடும்பத்தை, தினமும் விமர்சித்து பேசி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கலபுரகியில் இருந்து சித்தாபூருக்கு மணிகாந்தா ரத்தோட் தனது உதவியாளருடன், காரில் சென்றுள்ளார். அப்போது, ஷகாபாத் என்ற இடத்தின் அருகே சென்றபோது, காரை வழிமறித்த மர்ம கும்பல், மணிகாந்தா ரத்தோடிடம் தகராறு செய்தனர்.

மருத்துவமனையில் மணிகாந்தா ரத்தோட்

அவரையும், உதவியாளரையும் காரில் இருந்து இறக்கி, பீர் பாட்டிலால் தலையில் அடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனை கண்ட அப்பகுதிகள் மக்கள் உடனடியாக அவரை மீட்டு, கலபுரகியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மணிகாந்தாவின் காது, தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட்டு, கட்டுப்போட்ட மருத்துவர்கள், அவரது கையில் இருந்த காயத்திற்கு 8 தையல் போட்டனர். அவரது உதவியாளரின் தலையில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரியங்கா கார்கேதான் காரணம் என கூறியுள்ளார். கார்கே மீது கடந்த 15ம் தேதி ஊழல் புகார் கூறியதோடு, அதுதொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும், அதில் ஆத்திரமடைந்தே தன்னை அவர் கொலை செய்ய முயன்றதாகவும் மணிகாந்தா ரத்தோட் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE