காவலர் குடியிருப்பில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் இருந்து நாசமானது. காவலர் குடியிருப்பில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் தீ விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. காலை பணிக்கு செல்வதற்காக காவலர் ஒருவர் எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனங்களில் இருந்து புகை வருவதை கண்டு உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி முழுவதுமாக தீயை அணைத்தனர். அதற்குள் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் டிரான்ஸ்பார்மரில் இருந்து விழுந்த தீப்பொறிப்பட்டு இருசக்கர வாகனங்கள் தீ பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் மர்ம நபர்கள் யாரேனும் காவலர் குடியிருப்பில் புகுந்து இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தார்களா? என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காவலர் குடியிருப்பில் சிசிடிவி கேமரா இல்லாததால் தீ விபத்துக்கான காரணம் தெரியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். பொதுமக்களை சிசிடிவி கேமரா பொருத்துமாறு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் காவல்துறையினர் காவலர் குடியிருப்பில் சிசிடிவி கேமரா பொருந்தாமல் இருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!
துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!
ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?
பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?