கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் 2 நாள் சிபிசிஐடி காவல் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்த ப்ரகாஷ் மகள் ஷோபனாவுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட் டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவாக இ ருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிரவீண் மற்றும் பத்திரப்பதிவுக்கு சான்றிதழ் வழங்கிய இன் ஸ்பெக்டர் பிருதிவிராஜ் ஆகியோர் ஜூலை 16ம் தேதி கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து பத்திரப்பதிவுக்கு உதவிய வழக்கறிஞர் சார்லி கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிரவீண், இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ், வழக்கறிஞர் சார்லி ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் முன் ஜாமீன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மீண்டும் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கரூரில் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடியினர் கடந்த 2ம் தேதி கைது செய்தனர்.
» மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
» விநாயகர் சதுர்த்தி | பால்குடம், முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலம் @ கோவில்பட்டி
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த செல்வராஜும் கைது செய்து சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். செப். 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக செப் 4ம் தேதி யுவராஜ் என்பவர் சிபிசிஐடி கைது செய்தனர். அதே நாளில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் சிபிசிஐடியினர் சேரை 7 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி கோரினர். இதன் விசாரணை கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்து சேகர் அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி 2 நாள் சிபிசிஐடி காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். 2 நாள் சிபிசிஐடி காவல் விசாரணை முடிந்து இன்று (செப். 7ம் தேதி) கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சேகரை சிபிசிஐடியினர் ஆஜர்படுத்தினர். அவரை செப். 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சேகரை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.