ஓடும் ரயிலில் பெண் முன் அமர்ந்து மோசமான செயல்... வீடியோ எடுத்ததால் போலீஸ்காரர் ஓட்டம்; சிக்கவைத்த சிசிடிவி

By காமதேனு

சென்னையில் புறநகர் ரயிலில் பெண் முன்பு பாலியல் ரீதியாக மோசமாக செயலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அப்பெண்ணின் முன்பாக ஒருவர் அமர்ந்துகொண்டு மோசமான பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தாலும், துணிச்சலுடன் வீடியோ எடுத்திருக்கிறார். இதைப் பார்த்த அந்த நபர், பல்லாவரம் ரயில் நிலையத்தில் இறங்கி ஓட்டம் பிடித்துள்ளார்.

இது தொடர்பாக இந்தப் பெண் பல்லாவரம் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தாம்பரம் ரயில்வே காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது தாம்பரம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிவந்த இரும்புலியூரை சேர்ந்த கருணாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கருணாகரனை காவல்துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஓடும் ரயிலில் பெண்ணிடம் போலீஸ்காரரே பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!

நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!

பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE