ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட எண்ணூர், மீஞ்சூர், மாங்காடு, வெள்ளவேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச் சம்பவங்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக, கொலை,வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர், கண்காணிக்கப்பட்டு குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி காவல்ஆணையரக எல்லை பகுதிகளில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான 8 மாதங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்கள் 47 பேர்,கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் 16 பேர், ரவுடிகள் 45 பேர், போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் 37 பேர் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» பொத்தேரியில் கல்லூரி மாணவர் தற்கொலை
» பி.எஃப் அலுவலக ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சருடன் நாராயணன் திருப்பதி சந்திப்பு