ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கு தொடர்பான கோப்புகளை கேட்டு தமிழக டிஜிபிக்கு என்ஐஏ கடிதம் எழுதியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டுவீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தை கிண்டி போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் மூன்று நாட்கள் கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து போலீஸார் அவரை 3 காவலில் எடுத்து விசாரணை நடத்தி பின்னர் மீண்டும் சிறையில் அடைத்தனர். விசாரணையில் நீட் தேர்வு ரத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை, தேனாம்பேட்டை காவல் நிலையம், தமிழக பாஜக தலைமை அலுவலகம் அதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகை என தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு வீசியதை அடுத்து கிண்டி போலீஸார் ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தேசிய புலனாய்வு முகமை வழக்கை விசாரணைக்கு ஏற்றத்துடன் ரவுடி கருக்கா வினோத் மீது வெடிகுண்டு தயாரித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இதனிடையே, வழக்கு தொடர்பாக கோப்புகளை கேட்டு தமிழக டிஜிபிக்கு என்ஐஏ அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்கள் முழுமையாக கிடைக்கப் பெற்றப் பின் தீவிர விசாரணை நடத்த உள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!
'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!
என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!