சென்னை மீனம்பாக்கம் அருகே இன்று அதிகாலை அரசு பேருந்தும், வேனும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை சென்னை அண்ணாநகரில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியான நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இந்த விபத்தில் மது போதையில் வாகனத்தை வேகமாக ஓட்டியது தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று காலை சென்னை மீனம்பாக்கம் சிக்னலில் அரசு பேருந்தும், தனியார் நிறுவன வேனும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. வேனிலிருந்த தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், நல்வாய்ப்பாக அரசு பேருந்தில் பயணம் செய்த 40 பேரும் எந்த காயங்களுமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக தாம்பரம்- கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!