கள்ளக்குறிச்சியில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ரூ.9.02லட்சம் மதிப்புள்ள பேருந்து பயண சீட்டுகள் திருடுபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை ஒன்று கள்ளக்குறிச்சியில் உள்ளது. இந்த பணிமனையின் மூலம் விருத்தாசலம், சிதம்பரம், சென்னை, அரியலூர் பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பணிமனையில் பேருந்து பயணச்சீட்டுகளை சரி பார்க்கும் பணி அண்மையில் நடந்தது.
அந்தப் பணியின்போது இருப்பில் உள்ள பயண சீட்டுகள் காணாமல் போயிருப்பது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசுப் போக்குவரத்து கழகத்தின் ரூ. 9.02லட்சம் மதிப்புள்ள பேருந்து பயண சீட்டுகள் அவ்வாறு திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி கிளை மேலாளர் முருகன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடத்துநர் தமிழரசன் என்பவர் மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!
ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!
பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!