அதிர்ச்சி! மிக்சர் கம்பெனி ஊழியர் அடித்துக்கொலை

By காமதேனு

செங்குன்றம் அருகே மிக்சர் கம்பெனியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சுத்தியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். தலைமறைவான மிக்சர் கம்பெனி ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் 10க்கும் மேற்பட்ட சிறு சிறு நொறுக்குத் தீனி தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்குள்ள மிக்சர் தயாரிக்கும் கம்பெனி முன்பு நேற்றிரவு தலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போலீஸார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலையான வாலிபரை சுத்தியால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையான வாலிபரை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் விசாரணையில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மிக்சர் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். தீபாவளி பண்டிகையொட்டி சிலர் ஊருக்கு சென்ற நிலையில் தென்காசியை சேர்ந்த ஐயப்பன் என்ற தொழிலாளி மட்டும் ஊருக்கு செல்லாமல் இங்கேயே தங்கியிருந்தது தெரிய வந்ததுள்ளது.

முதலில் ஐயப்பன் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் கூறிய அடையாளங்களை வைத்து பார்த்ததில் இறந்தவர் ஐயப்பன் இல்லை என்பதும் அவர் தலைமறைவானதும் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஐயப்பன் பிடிப்பட்ட பிறகே கொலை செய்யப்பட்ட நபர் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE