காதலனின் கண் முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி... 4 சிறுவர்கள் கைது!

By காமதேனு

பெங்களூருவில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அதைத் தட்டிக்கேட்ட காதலனையும் மரக்கட்டையால் தாக்கிய 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் நான்கு சிறுவர்களால் நேற்று பாலியல் ரீதியாக தொல்லையை சந்தித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண் குப்பையைக் கொட்டுவதற்காக அவரது காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அவர்களை நான்கு பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த இளம்பெண்ணின் உடல்களைத் தொட்டு பாலியல் ரீதியாக பின் தொடர்ந்து வந்தவர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். இதை எதிர்த்த இளம்பெண்ணின் முகத்தில் அவர்கள் குத்து விட்டனர். அத்துடன் இந்த அடாவடி செயலைத் தடுக்க முயன்ற இளம்பெண்ணின் காதலனை மரக்கட்டையால் அவர்கள் தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூருவில் உள்ள ஆடுகோடி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். கோரமங்களா பாஸ்போர்ட் அலுவலகம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அத்துடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் நான்கு பேர் சிக்கினர். அவர்களை கைது செய்து விசாரித்த போது அனைவரும் 18 வயதுக்கும் கீழ்பட்ட சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் வேறு ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனரா என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் கிரகங்கள்... ஒரே நாளில் நவக்கிரக சுற்றுலாவுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம்!

அண்ணன் பேச்சை அண்ணனே கேட்கமாட்டாரு... சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கூகுள் பே சேவை ஜூன் 4 முதல் நிறுத்தம்...பயனாளர்கள் அதிர்ச்சி!

ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு... அதிர்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்... கே.பி.ராமலிங்கம் சொல்லும் கணக்கு நடக்குமா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE