கேரள மாநிலத்தில் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 வடமாநில தொழிலாளிகள் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரங்காடி பகுதியில் பெயிண்ட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. தீபாவளி மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று கடைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் கடையின் மேல் பகுதியில் தங்கியிருந்தனர். காலை திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.
தீயில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 4 பேரும் உயிர் தப்புவதற்காக மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார், தொழிலாளர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் மேல் மாடியில் இருந்து கீழே குதித்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!
வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!
மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!
திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!