கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் கோயில் திருவிழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.வி.சத்யநாதன் (62). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளூர் கமிட்டி செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கோயிலாண்டி பகுதியில் நேற்று இரவு கோயில் திருவிழாவில் சத்யநாதன் பங்கேற்றார். இரவு 10 மணிக்கு அங்கு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர், சத்யநாதனை கோடாரியால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து அவர் உடனடியாக கோயிலாண்டி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேற்கொண்டு அசம்பாவிதங்கள், மோதல்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சத்யநாதன் கொலையைக் கண்டித்து கோயிலாண்டியில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பி.மோகனன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக அபிலாஷ் (30) என்ற வாலிபர் போலீஸாரிடம் சரணடைந்துள்ளார். இவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துள்ளார். அப்போது சத்யநாதனுடன் ஏற்பட்ட பகை காரணமாக அவரை வெட்டி கொன்றதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அபிலாஷிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் ஆளுங்கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!
விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!
அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!
லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!