மருமகனை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த மாமனார்... மகளை துன்புறுத்தியதால் ஆத்திரம்!

By காமதேனு

தனது மகளை அடித்து துன்புறுத்திய மருமகனை கோடாரியால் வெட்டி மாமனார் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம், சாமராஜநகரில் ஜன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நஞ்சுண்டைய்யா. இவரது மகள் ரோசியை, ஹூப்ளியைச் சேர்ந்த உமேஷ் (28) என்பவருக்கு நஞ்சுண்சுடைய்யா திருமணம் செய்து வைத்தார்.

லாரி ஓட்டுநரான உமேஷ், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன் லாரி ஓட்டும் தொழிலில் கிடைக்கும் பணத்தை வீட்டிற்குத் தராமல் குடித்து அழித்துள்ளார். இதுகுறித்து தட்டிக் கேட்ட அவரது மனைவி ரோசியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

கொலை

இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் உமேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அத்துடன் போதையில் மனைவி ரோசியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ரோசியின் தந்தை நஞ்சுண்டைய்யா, கோடாரியால் உமேஷை சரமாரியாக வெட்டினார்.

இதில் ரத்தவெள்ளத்தில் உமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடேரு காவல் நிலைய போலீஸார், உமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப் பதிவு செய்து நஞ்சுண்டைய்யாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

மகளுக்குக் கொடுத்த 'லால்சலாம்' வாய்ப்பு...தோல்வியில் முடிந்தும் சோகத்தை வெளிக்காட்டாத ரஜினி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE