வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி. கந்தன் மற்றும் அவரது மகன் சதீஷ்குமார் மீது மருமகள் டாக்டர் ஸ்ருதி புகாரளித்த விவகாரத்தில், பணம் பறிப்பதற்காகவே மனைவி ஸ்ருதி இதுபோல செய்வதாக டிஜிபி அலுவலகத்தில் சதீஷ்குமார் புகாரளித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன். இவரது மகன் சதீஷ்குமார் சென்னை மாநகராட்சி 182- வது வார்டு மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக நேற்று ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார் சதீஷ்குமாரின் மனைவி ஸ்ருதி.
அதில், கடந்த 2018-ம் ஆண்டு, தான் சதீஷ்குமாரை திருமணம் செய்து கொண்டதாகவும், 1000 சவரன் நகை வரதட்சணை கேட்ட நிலையில் 600 சவரன் நகை வரதட்சணையாக கொடுத்து திருமணம் நடைபெற்றதாகவும் ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார். மேலும் 400 சவரன் நகையைக் கேட்டு தன்னை முன்னாள் எம்எல்ஏ-வான கந்தன் அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோர் தன்னை தாக்கி கொடுமைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து சதீஷ்குமார் இன்று தனது மனைவி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த சதீஷ் குமார், “எனது தந்தை பெயரையும் , என் பெயரையும் கெடுக்கும் நோக்கில் ஸ்ருதி இது போன்ற பொய் புகாரை அளித்திருக்கிறார். ஸ்ருதி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததால் 2021-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து, பின்னர் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. தீர்ப்பு எனக்கு சாதகமாக வரவுள்ளதால் என்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் ஸ்ருதி இது போன்ற பொய் புகார் அளித்துள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “கடந்த மூன்று ஆண்டுகளாக எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த ஸ்ருதி தற்போது வரதட்சணை கொடுமை என பொய்யான புகார் அளித்திருக்கிறார். இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனது பெயரை கெடுக்கும் நோக்கில் புகார் அளித்த ஸ்ருதி மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறேன்.
உடனடியாக என்னை பற்றி அவதூறாக வெளியிட்டு வரும் வீடியோக்களை நீக்க வேண்டும். ஸ்ருதியிடம் வரதட்சணை கேட்கவும் இல்லை, பெறவும் இல்லை. அவர் வீட்டை விட்டு செல்லும் போது அனைத்து நகைகளையும் எடுத்துச் சென்று விட்டார்” எனவும் அவர் கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
கோடிகளில் நஷ்ட ஈடு?! சர்ச்சையைக் கிளப்பிய நடிகை த்ரிஷாவின் வக்கீல் நோட்டீஸ்!
விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ. 43 கோடி சுருட்டல்!
கட்டையால் தாக்கி பெண் கொடூரக் கொலை... கல்லூரி மாணவி, தாய் கைது!
ரூ.300 கோடி லஞ்சம்... முன்னாள் ஆளுநர் வீட்டில் சிபிஐ ரெய்டு!
சூப்பர் ஸ்பீடு விஜய்... இன்னும் 10 நாளில் தொகுதிப் பொறுப்பாளர்களை அறிவிக்கிறார்!