சிமெண்ட் ஆலைக்கு லாரியில் கொண்டு வந்த மணிக்கரியில் கலப்படம்; ஜிபிஎஸ் கருவி மூலம் மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது

By காமதேனு

அரியலூர் தனியார் சிமெண்ட் ஆலைக்கு சென்னை துறைமுகத்திலிருந்து வந்த மணிக்கரியில் கலப்படம் செய்த லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவியை மாற்றி காரில் வைத்து, பின்பு லாரியில் மாற்றி மோசடி செய்தது விசாரணை தெரிவந்தது.

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் இருக்கும் அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலைக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து மணிக்கரி லாரியில் வருவது வழக்கம். இந்நிலையில் அவ்வாறு ஆலைக்கு வரும் போது அதில் கலப்படம் செய்யப்பட்டதாக லாரி மேற்பார்வையாளர் நல்லேந்திரனுக்கு தகவல் வந்தது. இதனை கண்காணித்தபோது, அந்த லாரி வரும் வழியில் சுமார் ஒரு மணி நேரம் ஒரு இடத்தை கடக்காமல் இருந்தது தெரியவந்தது‌. இதனையடுத்து லாரி மேற்பார்வையாளர் நல்லேந்திரன்‌ விக்கிரமங்கலம் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.

போலீஸார் விசாரணையில், காரில் ஜிபிஎஸ் கருவியை வைத்து லாரியில் வந்த மணிகரியில் ஒரு பகுதியை எடுத்துவிட்டு கலப்படம் செய்துவிட்டு, பிறகு மீண்டும் ஜிபிஎஸ்சை லாரியில் வைத்துள்ளனர். இதனையடுத்து தஞ்சாவூரைச் சேர்ந்த செந்தில், பிரேம் சங்கர், சதீஷ்குமார், ஹரிஹரன் மற்றும் அரியலூரைச் சேர்ந்த சுப்ரமணி, குமார், இளையராஜா ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE