'கையெழுத்து சரியில்லை' என 6 வயது சிறுமிக்கு ஸ்கேலால் அடி: டியூஷன் ஆசிரியை மீது வழக்கு

By KU BUREAU

தானே: மகாராஷ்டிராவில் சரியாக எழுதத் தெரியவில்லை எனக் கூறி ஆறு வயது மாணவியை, ரூலர் ஸ்கேலால் தாக்கியதாக டியூஷன் ஆசிரியை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், சரிகா காக் என்ற டியூஷன் ஆசிரியை, 6 வயதே ஆன சிறுமியை ரூலர் ஸ்கேலால் அடித்துள்ளார். மேலும், நன்றாகப் படிக்கவில்லை என்றும், சரியாக எழுதவில்லை என்றும் கூறி சிறுமியின் காதுகளிலும் அடித்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் சாகான் கிராமத்தில் நடந்துள்ளது.

வலி தாங்க முடியாமல் வீடு திரும்பிய அச்சிறுமி, தனது தாயிடம் ஆசிரியை அடித்ததை கூறியுள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் காவல்துறையை அணுகி புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பிஎன்எஸ் பிரிவுகள் 118(1) மற்றும் சிறார் நீதி சட்டத்தின் கீழ், டியூசன் ஆசிரியை மீது மண்பாடா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE