ரூ.3000 கோடி ’மியாவ் மியாவ்’ போதைப்பொருள் மீட்பு... டெல்லி - புனே போதை வலைப்பின்னலில் கிறுகிறுத்த போலீஸார்

By காமதேனு

நாட்டின் மிகப்பெரும் போதைப்பொருள் கைப்பற்றல் நடவடிக்கையாக, ரூ.3 ஆயிரம் கோடிக்கும் மேலான மதிப்புள்ள போதை வஸ்துகளை டெல்லி மற்றும் புனே போலீஸார் கடந்த 2 தினங்களில் கைப்பற்றி உள்ளனர்.

இளம் தலைமுறையினரை சீரழிக்கும் போதைப்பொருட்கள் வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு அப்பாலும் நீடித்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. மது உபயோகம் போன்று எளிதில் வெளித்தெரியாத இந்த போதை பிரயேகத்துக்கு பள்ளி - கல்லூரி மாணவர்கள் அதிகம் அடிமையாகி வருகின்றனர். நாட்டின் மனித வளத்தை சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களை முடக்க அரசு தரப்பில் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருளுக்கு ’நோ’

அவற்றில் ஒன்றாக கடந்த 2 தினங்களாக இந்தியாவின் மாநகரங்களான டெல்லி மற்றும் புனேவில் போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இதுவரை ரூ3 ஆயிரம் கோடிக்கும் மேல் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரையிலான மிகப்பெரும் போதைப்பொருட்கள் கைப்பற்றல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனைகள் அனைத்திலும் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் ’மெபெட்ரோன்’ என்ற தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் அதிகளவில் மீட்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் விநியோகம் செய்வோர் மற்றும் அதனை பயன்படுத்துவோர் மத்தியில் ’மியாவ் மியாவ்’ என்ற ரகசிய அடையாளத்தில் அழைக்கப்படும் இந்த மெபெட்ரோன் போதைப்பொருள் பயன்பாடு, தீவிரமான மனச்சிதைவுக்கு ஆளாக்கக்கூடியது. போதைப்பொருள் உபயோகத்தை வெளியில் காட்டாதது. அதே நேரத்தில் தீவிரமான நடத்தை கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியது.

டெல்லி மற்றும் புனே மாநகரங்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்

புனே பகுதியில் சிக்கிய 3 போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் வளைத்ததில் அவர்கள் வசமிருந்து 700 கிலோ மெபெட்ரோன் கைப்பற்றப்பட்டது. இந்த நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் மேலும் 400 கிலோ மெபெட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டது. உடன் 2 நபர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐவரும் போதைப்பொருள் விநியோகத்தில் மட்டுமே ஈடுபடக்கூடியவர்கள் என்பதால், இவர்களின் பின்னணியில் இயங்கும் மர்ம நபர்களின் வலைப்பின்னலுக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகை நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது... குவியும் வாழ்த்து!

முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை கடந்து செல்ல விவசாயிகள் அதிரடி!

பெற்றோர்களின் கவனத்திற்கு... மார்ச்.3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...

கோர விபத்து... லாரி - ஆட்டோ மோதி 8 பேர் பலியான சோகம்!

மார்ச் 31 வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE