திமுக மாவட்ட செயலாளர் வீட்டின் முன்பு தீக்குளித்த தொழிற்சங்க பிரமுகர் உயிரிழப்பு

By KU BUREAU

மதுரை: மதுரையில் திமுக மாவட்ட செயலாளர் வீட்டு முன்பு தீக்குளித்த தொழிற்சங்க நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மானகிரியைச் சேர்ந்த கணேசன், ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திமுக தொழிற்சங்கத்தில் கவுரவத்தலைவராக இருந்த இவர், தமிழகஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றவலியுறுத்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிம்மக்கல் பகுதியில் உள்ளகருணாநிதி சிலை அருகே தீக்குளித்தார். இதில் உயிர் தப்பினாலும், உடல்நலன் பாதித்து சிரமப்பட்டார்.

இதற்கிடையில், திமுக நிர்வாகிகள் மூலம் உதவி கேட்டும் கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாகவும், உதவி கோரி கட்சித் தலைமை, அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் கோ.தளபதிக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மூலக்கரை பகுதியில் உள்ளதிமுக மதுரை மாநகரச் செயலாளர்கோ.தளபதியின் வீட்டின் முன்பாகதீக்குளித்தார். 90 சதவீத காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று நள்ளிரவுசிசிக்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாவட்டச் செயலாளர் வீட்டின் முன்பு திமுக நிர்வாகி தீக்குளித்து உயிரிழந்தது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கணேசன் உடல் மதுரை அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் கோ.தளபதிமற்றும் திமுக நிர்வாகிகள் நேரில்சென்று, கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து கணேசன் மகன் அண்ணாதுரை கூறும்போது, “எனது தந்தை கட்சிக்கு உழைத்தவர். அவர் உடல் நிலை பாதித்தபோதிலும், கட்சி சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றவிரக்தியில் இருந்தார். இச்சூழலில்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE