கோர விபத்து... லாரி - ஆட்டோ மோதி 8 பேர் பலியான சோகம்!

By காமதேனு

பீகாரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ - லாரி மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் படுகாயம்

பீகார் மாநிலம், லக்சிசராய் மாவட்டம், ராம்கர் சவுக் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்டது ஜூலோனா கிராமம். இந்த கிராமம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (எண் 30), நேற்று நள்ளிரவு லாரி - பயணிகள் ஆட்டோ மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 14 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக, பாட்னாவில் உள்ள பிஎம்சிஹெச் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழப்பு

இந்த விபத்து குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், “மஹிசோனா கிராமத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் அனில் மிஸ்ரி, தனது மைத்துனர் மனோஜ்குமாரிடம், ஹால்சியில் இருந்து சில பயணிகளை லக்சிசராய்க்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். அதன்பேரில் மனோஜ்குமார் பயணிகளை அழைத்து வந்தபோது, ஜூலோனா அருகே லாரியும், ஆட்டோவும் மோதிக்கொண்டன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE