அதிர்ச்சி! மாணவனுக்கு மொட்டை அடித்து ராகிங் கொடுமை... கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

By காமதேனு

கோவையில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவனை சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்து ராகிங் செய்தது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ராகிங் நடப்பதை தடுப்பதற்காக ஒவ்வொரு கல்லூரிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்க வேண்டுமென தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவது வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில், கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று முதலாம் ஆண்டு மாணவனிடம் சீனியர் மாணவர்கள் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். ஆனால் அந்த மாணவன் பணம் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முதலாம் ஆண்டு மாணவனை சீனியர் மாணவர்கள் தாக்கி மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவன் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் இதுகுறித்து கோவை பீளமேடு காவல்துறையில் புகார் கொடுத்திருந்தனர். அதன் பேரில் விசாரணையில் ஈடுபட்ட போலீஸார், கல்லூரியில் பயின்று வந்த சீனியர் மாணவர்கள் மணி, மாதவன், வெங்கடேஷ், தரணிதரன், யாலிஸ், ஐயப்பன், சந்தோஷ் ஆகிய ஏழு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE