கேரளாவில் கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டை பெற்ற இரண்டு கைதிகள் இணையம் வழியாக சட்டம் பயில கேரள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரள மாநிலம் தலசேரியைச் சேர்ந்தவர் பட்டக்கா சுரேஷ் பாபு. இவர் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற கொலைக் குற்றம் ஒன்றில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். அதேபோல், தலசேரியைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளி கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற கொலைக் குற்றம் ஒன்றில் ஆயுள் தண்டை பெற்று தற்போது கண்ணூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறைக்கைதிகள் தபால் வழியாக மேற்கல்வி கற்கும் முறை நடைமுறையில் உள்ள நிலையில், இருவரும் எல்.எல்.பி என்ற 5 ஆண்டு சட்டப்படிப்பு படிக்க திட்டமிட்டு அதற்காக நுழைவுத்தேர்வு எழுதினர். அதில் இருவரும் தேர்ச்சியடைந்தனர்.
இதில் ஒருவருக்கு பூத்தோட்ட பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீநாராயண சட்டக் கல்லூரியிலும், இன்னொருவருக்கு மலப்புரம் பகுதியில் உள்ள கேஎம்சிடி சட்டக்கல்லூரியிலும் பயில இடமும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இருவரும் தங்களது தண்டைனை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, கல்வி கற்க ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஏகே ஜெயசங்கரன் நம்பியார், காசேர் இடப்பாகத் அமர்வு கடந்த அக்டோபர் 6-ம் தேதி இருவரில் ஒருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும், மற்றொருவருக்கு இணையம் வழியாக கல்லூரியில் சேரவும் அனுமதி அளித்தது.
இந்நிலையில், இருவருக்கும் கல்லூரிகளில் இணைய வழி கல்வி நடத்த கல்லூரிகள் தயராக உள்ள நிலையில், யுஜிசி விதிமுறைகள் அதற்கு அனுதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டால், இணைய வழி கல்வி அளிக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தன. அதேநேரம், பார்கவுன்சிலும் நேரடி வகுப்பில் சட்டம் படித்தால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து இன்று தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் ஏகே ஜெயசங்கரன் நம்பியார், காசேர் இடப்பாகத் அமர்வு, சிறை வாழ்க்கை என்பது தண்டனை மட்டுமல்ல, குற்றவாளிகள் திருந்தவும், மறுவாழ்வு பெறுவதற்கான இடமும் கூட என்று தெரிவித்தது. மேலும், அனைவருக்கும் இருப்பதை போல குற்றவாளிகளுக்கும் அடிப்படை மனிதாபிமான உரிமைகள் உள்ளதாகவும், சிறையில் கண்ணியமாக வாழவும் உரிமை உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், சிறைவாசிகளுக்கான கல்வி என்பது ஒரு எல்லைக்குள் இருந்து பெரும் விடுதலை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சிறைவாசிகள் பெரும் கல்வி அவர்களது எதிர்காலத்தில் நல்வாழ்வு வாழ்தவதற்கான வாய்ப்பை வழங்கும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இருவரும் இணையம் வழியாக சட்டம் பயில அனுமதி அளித்த நீதிபதிகள், தேர்வுகள் உள்ளிட்ட நடைமுறையின் போது 1 லட்சம் ரூபாய் தொகையும், இரண்டு நபர்களின் அனுமதி கோரும் கடிதத்தையும் சிறைத்துறையிடம் செலுத்தினால் ஜாமீனில் விடுவிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஜாமீன் கோருவதற்கான அத்தாட்சிகளை கல்லூரி அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முன்னதாக பெற்று சிறைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்