அதிர்ச்சி; முதலமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்டது!

By காமதேனு

தெலங்கானா முதல்வரும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் பயணித்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தெலங்கானா மாநில சட்டமன்றத்திற்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும், காங்கிரஸூக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

இந்நிலையில், மஹ்பூபா மாவட்டத்தில் உள்ள தேவரகத்ரா, மக்டல், நாராயணபேட் மற்றும் கட்வாலா சட்டமன்ற தொகுதிகளில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபட்ட இருந்தார்.

இதற்காக எர்வள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து பிற்பகல் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது, ஹெலிகாப்டர் பறந்த சில நிமிடங்களிலேயே அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதை உடனடியாக கண்டறிந்த விமானி ஹெலிகாப்டரை உடனடியாக தரையிறக்கினார்.

அதிகாரிகள் ஆய்வு

இதனால், ஏற்பட இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, விமானத்துறை அதிகாரிகள் வேறு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்தததையடுத்து, சந்திரசேகரராவ் தேர்தல் பிரசாரத்திற்கு தாமதாக புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சனாதனம் குறித்து நான் பேசியது தவறில்லை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ... கொந்தளித்த அமிதாப் பச்சன்!

விஜய் நிச்சயமா அரசியலுக்கு வருவார்! அடித்துச் சொல்லும் சீமான்

புது வாக்காளர்களாக 4 லட்சம் பேர் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்

அதிர்ச்சி! கரு கலைக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பலி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE