காக்கழனியில் இரு வேறு சமூகத்தினர் மோதல் விவகாரத்தில் மேலும் 4 பேர் கைது

By KU BUREAU

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த காக்கழனி கிராமத்தில், ஆக.24-ம் தேதி இரவு இரு வேறு சமூகத்தினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்களின் பகுதியில் புகுந்து மற்றொரு தரப்பினர் தாக்கியதில் 4 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து நாகை நகர டிஎஸ்பி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, ஒரு தரப்பில் 8 பேர், மற்றொரு தரப்பில் 7 பேர் என 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 8 பேரில் 5 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து, மீண்டும் மோதல் நேரிடாமல் இருக்கும் வகையில், இரு தரப்பினரிடமும் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, 8 பேரில் எஞ்சியிருந்த 3 பேரில் ஒருவரையும், 7 பேரில் 3 பேரையும் என மொத்தம் 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மேலும், அப்பகுதியில் மீண்டும் மோதல் நேரிடாமல் தடுக்கும் நோக்கில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு- கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE