சென்னையில் அதிர்ச்சி! போலீஸ்காரர் மீது கொலை வெறித்தாக்குதல்; கும்பல் அட்டகாசம்

By காமதேனு

விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரவுடி பிரபு

சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் சிலர் மதுபோதையில் தகராறு செய்வதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்திருக்கிறது. அதனை விசாரிக்க ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபுவை காவல்துறையினர் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, தனது செல்போனை தவறவிட்டதாக ரவுடி பிரபு கூறியிருக்கிறார். இதையடுத்து ரவுடி பிரபுவை காவலர் நாகேந்திரன் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் பிரபுவின் கூட்டாளி என நினைத்து காவலர் நாகேந்திரன் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதில் பலத்த காயமடைந்த காவலர் நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடி கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை அருகே காவலர் மீது ரவுடி கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் காவலர்கள் மீது வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மறைவதற்குள் மற்றொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!

அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE