கேரளாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் தனது இரட்டை குழந்தைகள் மற்றும் மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் ஹென்றி (42) ஆலிஸ் பிரியங்கா (40) தம்பதியினருக்கு, நோவா மற்றும் நேதன் என்ற நான்கு வயது இரட்டை குழந்தைகள் இருந்தனர். தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்த ஆனந்த், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சான் மாட்டியோ என்ற நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் நேற்று கேட்டதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் வீட்டுக்குள் நுழைய முயன்ற போது, வீட்டின் கதவு உட்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த ஜன்னல் ஒன்றின் வழியாக போலீஸார் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, அங்கு ஆனந்தும், பிரியங்காவும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர். இரட்டை குழந்தைகள் இருவரும் மர்மமான முறையில் வீட்டிற்குள் உயிரிழந்து கிடந்தனர். இதையடுத்து, நால்வரது உடல்களையும் மீட்டுள்ள போலீஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் பிரியங்காவை சுட்டுக்கொன்று விட்டு, பின்னர் ஆனந்த் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் குழந்தகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குடும்பத்தகராறில் இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்ற வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக மற்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், மொத்த பகுதியும் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே உயிரிழந்த நால்வரது உடல்களையும் சொந்த ஊரான கேரளாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடிய 35,000 பேர்... அதிர்ந்து போன அமீரகம்!
ஒரு மகன் போனாலும் ஓராயிரம் மகன்கள், மகள்கள் உள்ளனர்... சைதை துரைசாமி உருக்கம்!
அரசு பள்ளிகளில் இனி ஆன்லைன் சேர்க்கை... விரைவில் வெளியாகிறது உத்தரவு!
கீர்த்திக்கு கொடுத்த முதல் கிஃப்ட்...வசமாய் சிக்கிய அசோக்செல்வன்!
துணை முதல்வர் மீது சொத்துக் குவிப்பு... லோக் ஆயுக்தா அதிரடி!