சென்னையில் மீண்டும் கொடூரம்; 2 சிறுமிகள் உள்பட 3 பேர் கூட்டுப் பலாத்காரம்: சிறுவர்கள் உள்பட 11 பேர் கைது!

By காமதேனு

சென்னையில் ஒரு இளம்பெண் மற்றும் 2 சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் இரு 17 வயது சிறுமிகளும், ஒரு இளம்பெண் உட்பட 3 பேர் தங்களது உறவினர் வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 30-ம் தேதி 17வயது சிறுமி இரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்ததைப் பார்த்த அவரது சித்தப்பா கண்டித்துள்ளார். அப்போது சிறுமிக்கும், அவரது சித்தப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் தன்னைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீஸார் பாதிக்கப்பட்ட சிறுமியை ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர், சிறுமி மீது எந்த ஒரு காயங்களோ, பாலியல் வன்புணர்வு செய்ததற்கான அடையாளங்களோ இல்லை என்றும், அவரது ஒத்துழைப்பின் பேரில் பலமுறை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலீஸார் சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது உறவினரான 2 பெண்களும் சேர்ந்து இரவு நேரங்களில் பல இடங்களில் சுற்றி வந்ததும், அப்போது 15-க்கும் மேற்பட்டோர் அவர்களை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

அதே போல் சம்பவத்தன்று இரண்டு பெண்களும் வீட்டிற்குச் சென்ற நிலையில், 17வயது சிறுமி மட்டும் அன்று நள்ளிரவு 2மணிக்கு வீட்டிற்குச் சென்ற போது சித்தப்பா கண்டித்ததால் சிறுமி பொய் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமி உட்பட 3 பேரை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தனுஷ்(19), சஞ்சய்(21), பாஸ்கர்(22), முத்துராமன்(21) உள்பட 15 முதல் 18 வயதுடையவர்கள் என 11 பேர் மீது போக்சா சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸார், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னையில் ஏற்கெனவே தலைமைச்செயலக காலனி மற்றும் வண்ணாரப்பேட்டையில் இதுபோன்ற சம்பவம் நிகழந்துள்ள நிலையில் தற்போது புளியந்தோப்பு பகுதியில் 2 சிறுமிகள் உள்பட மூன்று பேரை 11 பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE