6 மாத கர்ப்பத்தை மறைத்த மாணவி; வயிற்று வலியால் வெளிப்பட்ட 'குட்டு': காதலனை தேடும் போலீஸ்

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுமியை காதலித்து, கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது போக்சோ சட்டம் பாய்ந்து உள்ளது. தலைமறைவாக இருக்கும் தொழிலாளியைப் பிடிக்க போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் தனீஸ்(23) தச்சுத் தொழிலாளியாக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் தனீஸ் நெருக்கமாகப் பழகிவந்தார். ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இந்த காதலைப் பயன்படுத்தி சிறுமியிடம் தொடர்ந்து அத்துமீறினார் தனீஸ்.

இந்தநிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடீரென வயிற்று வலியால் துடித்தார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதையும், அதை வீட்டில் அவர் மறைந்து வாழ்ந்து வந்ததையும் தெரிவித்தனர். கர்ப்பிணியாக 6 மாதங்கள் கடந்த நிலையிலும், சாதுர்யமாக வீட்டில் அதை மறைத்து வந்துள்ளார் பிளஸ் டூ மாணவி. இதுகுறித்து குழித்துறை அரசு மருத்துவமனையில் இருந்தே குளச்சல் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து சிறுமி கொடுத்தப் புகாரின் பேரில் போலீஸார் தொழிலாளி தனீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE