பயணியிடமிருந்து 5 லட்சத்தைப் பறித்துச் சென்ற திருடன்: 2 கி.மீ விரட்டிப் பிடித்த டிரைவர், நடத்துநருக்குப் பாராட்டு

By காமதேனு

பயணிடமிருந்து 5 லட்ச ரூபாயைப் பறித்துச் சென்ற திருடனை 2 கி.மீ தூரம் விரட்டிச் சென்று பிடித்து போலீஸில் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநர், நடத்துநரை பெங்களூரு காவல் ஆணையர் பி.தயானந்தா இன்று பாராட்டினார்.

தமிழகத்தில் இருந்து பெங்களூரு நோக்கி கேஎஸ்ஆர்டிசி வால்வோ பேருந்து ஜூன் 14 -ம் தேதி சென்றது. அந்த பேருந்து எலக்ட்ரானிக் சிட்டியை அடைந்தது. அப்போது பேருந்தில் இருக்கையில் அமர்ந்திருந்த தம்பதியிடமிருந்து 5 லட்சம் ரொக்கப்பணம் கொண்ட பையைப் பறித்துக் கொண்டு திருடன் தப்பித்து ஓடினார். இதைப் பார்த்து தம்பதியர் அலறினர்.

அவர்களின் சத்தத்தைக் கேட்டு அவர்கள் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் திருடனை 2 கி. மீ தூரம் விரட்டிச் சென்று பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பணம் உரியவர்களிடம் போலீஸாரால் ஒப்படைக்கப்படடது.

இந்த நிலையில், 5 லட்சத்துடன் தப்பிச் சென்ற திருடனைப் பிடித்த கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பெங்களூரு காவல் ஆணையர் பி.தயானந்தா இன்று பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE