ஆடு மேய்ச்சலுக்கு சென்ற மனைவியை அடித்துக்கொன்ற கணவர்: நடத்தை சந்தேகத்தால் விபரீதம்

By காமதேனு

ஆடு மேய்க்க சென்று இருந்த மனைவியை தேடிப்போய் கணவர் சரமாரியாகக் கம்பால் அடித்தார். இதில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலையில் மனைவி உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், மேலசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(50) லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி மாரியம்மாள்(45) சமீபகாலமாக மாரியப்பனுக்கு அவரது மனைவி மாரியம்மாளின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி மோதலும் இருந்துவந்தது. மாரியம்மாள் தன் வீட்டிலேயே ஆடுகளும் வளர்ந்து வந்தார். தினமும் அதை அவரே மேய்ச்சலுக்கும் அழைத்துச் செல்வது வழக்கம்.

அந்தவகையில் நேற்று மாலையில் ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் மாரியம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற மாரியப்பன் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கே கிடந்த ஒரு கம்பால் தன் மனைவியை சரமாரியாகத் தாக்கினார். இதில் மாரியம்மாள் அங்கேயே மயங்கி விழவே அவர் பயந்து ஓடிவிட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் மாரியம்மாளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலன் இன்றி இன்று காலையில் மாரியம்மாள் உயிர் இழந்தார்.

இதுதொடர்பாக ஒட்டப்பிடாரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தூத்துக்குடி, சிப்காட் காவல் நிலையத்தில் மாரியப்பன் இன்று காலையில் சரணடைந்தார். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் கணவன், மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE