நடிகை கௌதமி புகார்... அழகப்பனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

By காமதேனு

நடிகை கௌதமியின் சொத்துக்களை அபகரித்ததாக அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் உறுப்பினராக இருந்த நடிகை கௌதமி, தனக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் உறவினர்கள் அபகரித்ததாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரை முன்வைத்து அவர் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டதால், அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அழகப்பனுக்கு சொந்தமான காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

அழக்கப்பன் வீட்டில் போலீஸார் சோதனை

அப்போது அங்கு ஆவணங்கள் இருந்த 11 அறைகளுக்கு போலீஸார் சீல் வைத்ததோடு, முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். இதனிடையே தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அமைத்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள அழகப்பன்

6 முறை சம்மன் அனுப்பியும் அழகப்பன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் யாரும் ஆஜராகவில்லை என்பதால் அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!

ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!

பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!

வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE