திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை - ரூ 2.28 லட்சம் பறிமுதல்

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ற வருவதாகவும் பத்திரம் பதிவு செய்ய அதிகாரிகள் லஞ்சம் வகுவதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி (பொறுப்பு) வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, உதவி ஆய்வாளர்கள் கோபிநாத் மற்றும் சக்கரபாணி மற்றும் போலீஸார் தலைமையில் இன்று மாலை அலுவலத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர் அப்போது போலீஸாரை கண்டவுடன் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வந்தவர்கள் மற்றும் அலுவலர்கள் தங்கள் கையில் வைத்திருந்த பணம், நகை மற்றும் பேங்க் பாஸ்புக், ஆதார் அட்டை ஆகியவையை ஜன்னல் வழியாக வீசி சென்று அங்கிருந்து தப்ப முயன்றனர்.

அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ2 லட்சத்து 28 ஆயிரத்து 760 ரொக்கப் பணம் மற்றும் 4 பவுன் தங்க நகை ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்தவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து மேலாக விசாரணை நடத்தினர். மேலும் அருகே உள்ள ஆவண எழுத்தர் அலுவலகத்திலும் சோதனை செய்தனர். சில ஆவண எழுத்தர்கள் தங்கள் அலுவலகத்தை மூடிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

அந்த அலுவலகத்தையும் உடைத்து சோதனை செய்யவும் லஞ்ச ஒழிப்பு துறையினர் திட்டமிட்டுள்ளனர். இச்சோதனையில் யாரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE