அரசுப்பள்ளி வளாகத்திலேயே 8ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் வளாகத்திலேயே 8ம் வகுப்பு மாணவி தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம்போல பள்ளிக்கு வந்த இந்த மாணவி திடீரென பள்ளியில் வைத்து அதிக அளவு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு மயங்கினார்.

பள்ளியின் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு கொட்டாரத்தில் உள்ள தனியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்நிலையில் சக மாணவிகள் சிலர் 8ம் வகுப்பு மாணவியை கண்டிப்பதற்காக ஏழாம் வகுப்பில் அமர்த்தியதாகவும் குற்றம் சாட்டினர்.

இதேபோல் மாணவி பள்ளியிலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தெரிந்ததும், மாணவியின் பெற்றோர் உள்ளிட்டக் குடும்பத்தினரும் அப்பகுதியில் குவிந்தனர். இதனிடையே சிறுமியின் தற்கொலை முயற்சிக்கு பள்ளியில் இருந்து வந்த அழுத்தம் ஏதும் காரணமா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என கன்னியாகுமரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE