மதுரையை சேர்ந்த இசைக் கலைஞர் தேவ் ஆனந்த்தை சென்னையில் கும்பல் ஒன்று கத்திமுனையில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் தேவ் ஆனந்த். இசைக் கலைஞரான இவர், பல்வேறு இடங்களுக்கு சென்று இசைக்கச்சேரி செய்வது வழக்கம். இந்தநிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவிட்டு தேவ் ஆனந்த் மதுரை சென்றுள்ளார். நண்பர்களுடன் தேவ் ஆனந்த் சென்ற கார் மீது இருசக்கர வாகனம் ஒன்று உரசியுள்ளது. இதையடுத்து, கார் நிறுத்தப்பட்டதால் தேவ் ஆனந்த் கீழே இறங்கியுள்ளார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து கத்தி முனையில் தேவ் ஆனந்த்தை கடத்தியுள்ளது.
இது தொடர்பாக நண்பர்கள் கெவின், கிரீஷ், இப்ராஹிம் ஆகியோர் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். விசாரணையில் தேவ் ஆனந்த்தின் சகோதரர் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பணத்தை திரும்ப கேட்டு தன்னை சிலர் கடத்தி இருப்பதாக காவல்துறையினரிடம் செல்போனில் தேவ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தேவ் ஆனந்த்தை கடத்திய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை இசைக்கலைஞர் சென்னையில் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.