சென்னையில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பம்பிங் ஸ்டேஷன் குட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர்(35). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டில் இருந்த பிரிட்ஜில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அப்போது இவர் வீட்டில் வைத்திருந்த காப்பர் ஒயர்களும் தீப்பிடித்து எரிந்தன. பின்னர் தீ மளமளவென வீடு முழுவதும் பரவி புகை சூழ்ந்ததால் தனசேகரன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாநகர், வேப்பேரி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர். உடனே அங்கு வந்த தலைமைச்செயலக காலனி போலீஸார் அப்பகுதி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. மேலும் தீவிபத்தில் வீட்டில் இருந்த டிவி, வாஷிங்மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
இந்த தீவிபத்து குறித்து தலைமைச் செயலக காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதையும் வாசிக்கலாமே...
பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!
குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?
அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!
ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!