மேற்கு வங்க சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாக இருப்பதாகவும், இதுவரை 196-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறைகளில் சீர்திருத்தங்கள் மற்றும் சீர்திருத்த இல்லங்கள் தொடர்பான வழக்குகளைக் குறிப்பிடும்போது, சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாக இருப்பதாகவும், இதுவரை 196-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அமிகஸ் க்யூரி' (நீதிமன்றத்துக்கு தகவல் அளிக்கும் நபர் அல்லது அமைப்பு) சார்பில் இந்த தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தீவிரமானது என கூறியுள்ள, தலைமை நீதிபதி டி. எஸ். சிவஞானம், நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா ஆகியோர், திங்களன்று டிவிஷன் பெஞ்சில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடும் என தெரிவித்துள்ளனர்.
'அமிகஸ் க்யூரி' தகவல் படி, சிறை ஊழியர்கள் பெரும்பாலும் ஆண்களாக உள்ளனர். அதனால் பெண் கைதிகள் வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்கள், சீர்திருத்த இல்லங்களில் ஆண் ஊழியர்கள் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், "எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினை தீவிரமானது. இந்த விஷயங்கள் அனைத்தையும் (சிறை சீர்திருத்த பொதுநல மனுக்கள்) குற்றவியல் விஷயங்களை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றுவது பொருத்தமானது என நாங்கள் கருதுகிறோம்" என்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பெண் கைதிகள் கர்ப்பமாக உள்ளதும், சிறைகளில் 196-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ள சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!
அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!
நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!