மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர் ஒருவர், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர் ஒருவரின் வீட்டில் ஒரு குடும்பம் வாடகைக்கு குடியிருந்துள்ளது. இவர்களின் வீட்டில் 11 வயது சிறுமியும் உள்ளார். இந்த சூழலில் சிறுமியின் குடும்பத்தினர் சனிக்கிழமையன்று வெளியில் சென்றுள்ளனர். சிறுமியின் குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை அறிந்துகொண்ட வீட்டின் உரிமையாளரான ஓய்வு பெற்ற காவலர், சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் காவல்துறையில் புகாரளித்தனர்.
இது குறித்துப் பேசிய இந்தூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் (ஏசிபி) சோனாக்ஷி சக்சேனா,"குற்றம்வாளி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டு உரிமையாளர். அவர் சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அத்துமீறியுள்ளார். இது குறித்து இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்"என்று கூறினார்.