காதலிப்பதாக நடித்து 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்; குண்டர் சட்டத்தில் கைது

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நாகர்கோவில், பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(21). இவர் கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைக் காதலிப்பது போல் நடித்து தன் நண்பர் வீட்டுக்கு அழைத்துப் போய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். தொடர்ந்து தன் நண்பர்கள் இருவரையும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக அழைத்து வந்தார். இதனால் அங்கிருந்து அந்த மாணவி தப்பி ஓடிவந்தார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்தப் புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில் விக்னேஸ்வரன் மீது இன்னொரு மாணவியும் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். அதன் பேரிலும் அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் இருக்கும் விக்னேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய குமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத், குமரி ஆட்சியர் ஸ்ரீதருக்குப் பரிந்துரை செய்தார். அதன்பேரில் விக்னேஸ்வரன் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டது. இதனால் விக்னேஷ்வரன் பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE