ராஜஸ்தானில் அத்தை வீட்டிற்கு வந்த 11 வயது சிறுமியை அவரது உறவினர்களான 13 மற்றும் 15 வயது சிறுவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அம்பமாதா பகுதியில் உள்ள அத்தை வீட்டிற்கு 11 வயது சிறுமி வந்திருந்தார். அப்போது அவரது உறவினர்களான 3 மற்றும் 15 வயது சிறுவர்கள், சிறுமியை தனியாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அத்துடன், இதை வெளியே சொன்னால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று அந்த சிறுவர்கள் மிரட்டியுள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு உள்காயங்கள் காரணமாக உடல்நிலை மோசமடைந்தது.
இதையடுத்து அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். அப்போது தனது குடும்பத்தினரிடமும், மருத்துவர்களிடம் சிறுவர்களால் தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அம்பமாதா போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்களையும் இன்று கைது விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிறுமியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து டிஎஸ்பி சேத்னாபதி கூறுகையில்," இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.
சிறுமியை 2 சிறுவர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் உதய்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.