பாட்டியைக் கொன்று எரித்துவிட்டேன்; போலீஸை பதறவைத்த மனநோயாளி: கடைசியில் நடந்தது என்ன?

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்திற்கு பதற்றத்துடன் நேற்று இரவு வந்த வாலிபர் ஒருவர் தன் தோட்டத்தில் மாங்காய் பறித்தப் பாட்டியை எரித்துக் கொன்றுவிட்டதாகச் சொன்னார். கடைசியில் அவர் மனநோயாளி எனத் தெரியவந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்திற்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தனக்கு சொந்தமாக மாந்தோட்டம் ஒன்று உள்ளது. அது கருங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூட்டேற்றி பகுதியில் உள்ளது. அங்கு ஒரு பாட்டி, மாங்காய் பறிக்க வந்தார். அவரை நான் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டேன் எனச் சொன்னார். அதனால் தான் சரண்டர் ஆக வந்திருப்பதாகவும் அவர் சொல்ல, பூட்டேற்றி பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு சடலம் எதுவும் இல்லை.

தொடர்ந்து அவர் போலீஸாரிடம், பாட்டியின் சடலத்தைத் தான் எரித்துவிட்டதாகச் சொன்னார். போலீஸார் நடத்திய விசாரணையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என தெரியவந்தது. போலீஸார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் மனநோயாளி எனத் தெரியவந்தது. இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு தான் கொலை செய்துவிட்டதாக அவர் காவல் நிலையத்தை பதறவைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

இதே கருங்கல் காவல் நிலையத்தில் மற்றொரு மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் இன்ஸ்பெக்டரின் ஆய்வு வாகனத்தையே திருடிப்போய், நடுவழியில் நிறுத்திச் சென்ற சம்பவம் கடந்த வாரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE